கும்பகோணம் பாணாதுறை பகுதியில் சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை

கும்பகோணம் பாணாதுறை பகுதியில் சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
X

சாலையை சீரமைக்க கோரி முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி கும்பகோணம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தார்.

கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மேடு பள்ளமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க கும்பகோணம் நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து பாணாதுறை பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி கும்பகோணம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கும்பகோணம் பாணாதுறை பத்து கட்டு தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றபோது சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் சாலை சீரமைக்க படாமல் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது.

இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இந்த பள்ளங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த சாலை வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

எனவே எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் இந்த பகுதி பொதுமக்களை திரட்டி கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்