கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் துவக்கிவைப்பு
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை மற்றும் காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஏற்பாட்டில், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெஇடர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாகனம், பேருந்து நிலையத்தில் இருந்து மகாமக குளம், உச்சிப்பிள்ளையார் கோயில், தாராசுரம், சுற்றுவட்ட சாலை, மேலக்காவேரி, அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது. இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் கந்தசாமி, கோட்டாட்சியர் லதா, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரேமா, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை கலந்து கொண்டனர்.
மேலும், வட்டாட்சியர் பிரபாகரன், இந்திய மருத்துவச்சங்க தலைவர் மருத்துவர் பரமசிவம், மருத்துவர் பாலமுருகன், கும்பகோணம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் விஜயன், செயலாளர் பாலமுருகன், ரெட் கிராஸ் துணைத் தலைவர் ரோசாரியோ, ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், கார் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் அறிவழகன், போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் முத்துக்குமார், சங்கிலி சிங்காரம் மற்றும் ரோட்டரி கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu