அரசின் அனைத்து அரசிதழ்கள், சுற்றறிக்கைகள் தமிழில் வெளியிட கோரிக்கை
மாதிரி படம்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்க தலைவர் சுந்தர விமலநாதன், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில தாய்மொழியிலேயே அந்தந்த மாநிலங்களின் அரசிதழ்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அலுவலக நடைமுறைகள் அனைத்தும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலங்கள் தங்களது தாய்மொழியை அலுவல் மொழியாக கொண்டு ஆங்கிலத்தை இரண்டாவது அலுவல் மொழியாக நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் பல துறைகளின் அரசாணைகள் அரசியல் சுற்றறிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவுகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமை செயலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்துகள் உள்ளிட்டவை ஆங்கில மொழியில் அனுப்பப்படும் அலுவல் நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக உழவர் நலத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 2021 காண அரசாணையும் 16 பக்கங்களைக் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளும் முழுக்க முழுக்க ஆங்கில மொழியிலேயே உள்ளன.
தமிழக அரசின் செயல் முறைகள் அலுவல் மொழி அனைத்தும் நமது தாய்மொழியான தமிழிலேயே அமைய வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும் மாவட்ட அளவிலான அரசிதழ்கள் எதுவும் இதுவரை இணையத்தளத்தில் வெளியிடப் படாமல் உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி அரசிதழ்களின் வெளிப்படைத் தன்மையை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்படும் அரசிதழ்கள் அனைத்தும் உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 4 இன் கீழ் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu