கூட்டுறவுக் கடன் தள்ளுபடி அரசு அறிவித்த மறுஆய்வு குழு முறையாக அமைக்க கோரிக்கை

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி அரசு அறிவித்த  மறுஆய்வு குழு முறையாக அமைக்க கோரிக்கை
X
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பட்டியலில் உள்ள முறைகேடுகளை விசாரணை செய்ய திமுக அரசு அறிவித்துள்ள மறுஆய்வு குழுவை முறையாக அமைக்க வேண்டுமென தஞ்சை பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அறிவித்த கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பட்டியலில் உள்ள முறைகேடுகளை விசாரணை செய்ய திமுக அரசு அறிவித்துள்ள மறுஆய்வு குழுவை முறையாக அமைக்க வேண்டுமென தஞ்சை பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் விமலநாதன் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

முந்தைய அண்ணா தி.மு.க. அரசு கடந்த கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தள்ளுபடி என அறிவித்தது. மேலும் இந்த தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பட்டியல் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,ஊராட்சி மன்ற அலுவலகம், ஆகியவற்றில் வெளியிடுவதோடு இணையதளத்திலும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அறிவித்தது. ஆனால் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது 150 நாட்களாகியும் இன்றுவரை அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை. மேலும் தற்போதைய தி.மு.க. அரசு கடன் தள்ளுபடி பெற்ற பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இந்த முறைகேடுகளை கண்டறிய மறு ஆய்வு குழு அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் உள்ள அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அருகே உள்ள மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பட்டியலிலுள்ள முறைகேடுகள் முழுமையாக வெளிவருவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.எனவே தமிழகத்தில் வட மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ஆய்வு செய்ய தென் மாவட்ட அதிகாரிகளும் தென் மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் ஆய்வு செய்ய வடமாவட்ட அதிகாரிகளும், மற்றைய மாவட்டங்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நியமிக்கப்பட்டால் முறைகேடுகளின் முழுமையும் வெளிவர வாய்ப்புள்ளது எனவே விவசாயிகளின் இந்த கோரிக்கையை இந்த அரசு ஏற்று மறு ஆய்வுக் குழுவை மறு சீரமைத்து உத்தரவிடும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!