திருச்சியிலிருந்து வாராணசிக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்
திருச்சியிலிருந்து இந்தியாவின் தலைநகரமான தில்லிக்கு விமான போக்குவரத்து இல்லாததால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், யாத்ரிகர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக சிறந்து விளங்குகிறது.
திருச்சிராப்பள்ளியிலிருந்து வாராணசி மற்றும் தில்லி வழியாக விமான சேவையை இயக்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தில்லி வழியாக வாராணசிக்கு காலை 6-7 மணிக்கு புறப்பட்டு, மாலையில் வாராணசியிலிருந்து திரும்புவதன் மூலம் தினசரி விமானச் சேவையை விரைவாக இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் நேரடியாக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் 13 எம்பி -க்கள் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu