பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பின் பணி நியமனம் செய்ய கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பின்  பணி நியமனம் செய்ய   கோரிக்கை
X
பிஎட் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமிக்க கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை

தமிழக அரசின் கல்வி மானிய கோரிக்கையில் பிஎட் பட்டதாரி 5 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2009 - 2010 ஆண்டுகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு பதிவு மூப்பு முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையிலுள்ள பிஎட் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பணி நியமனம் நிறுத்தி வைக்பட்டதது.

தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தேர்தலுக்கு பின்பு பொறுப்பேற்றுக் கொண்ட அப்போதைய அ.தி.மு.க. அரசு எங்களுக்கு வேலை கொடுக்காமல் பணி நியமனங்களை நிறுத்தியதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யுமாறு புதிய அறிவிப்பாணை ஒன்றையும் வெளியிட்டது.

அரசின் இத்தகைய அறிவிப்பாணையால் பாதிப்படைந்த நாங்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எங்களுக்கான பணி நியமனம் கோரி வழக்கு தொடர்ந்தோம். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிப்படைந்தவர்கள் பதிவு மூப்பு முறையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு எங்களுக்கு பொருந்தாது, எங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இப்பிரச்னைக்கு இன்று வரையிலும், தீர்வு ஏற்படாததாலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டும், எங்களுக்கு நீதிமன்றம் பணி வழங்க வேண்டுமென உத்தரவிட்டும் கூட, அன்றைய அரசு பணி வழங்கவில்லை. தற்போது வயது வரம்பின் காரணத்தால் வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் ஆசிரியர்கள் தவித்து வருவதோடு, எங்களது சுமார் 5 ஆயிரம் குடும்பங்களும் பணிக்கு சொல்ல முடியாத துயரங்களுக்கும் ஆளாகியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பல்வேறு குழப்பங்களும் முறைகேடுகளும் அரங்கேறி நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு முந்தைய அதிமுக அரசு ஆளானது. தற்போது நடைபெற்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தங்கள் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறது.

தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆட்சிக் காலத்தில் (2009-2010) பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுத்து, சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில், பரிசீலித்து கொள்கை முடிவெடுத்து, வரும் 27 -ஆம் தேதி நடைபெறும், கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவித்து, எங்கள் வாழ்வில் ஒளியேற்றி பணி நியமன ஆணை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!