அரசினர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புகளுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசினர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புகளுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு
X

மாதிரி படம்.

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இதில் 3,494 இளநிலை மாணவர்களும் 788 முதுநிலை மாணவர்களும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுமுடிவுகள் வெளியிடுவதற்கு அனைத்து துறை தலைவர்கள் கொண்ட தேர்ச்சிகுழு கூட்டம் கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் முன்னிலையில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.gacakum.ac.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!