கபிஸ்தலம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுடுகாட்டுக்கு சொந்தமான இடம் மீட்பு
கபிஸ்தலம் அருகே உள்ளிக்கடை பெருமாள் கோவில் கிராமத்தில் தனிநபரால் ஆக்கிரமிப்பில் இருந்த ஆதிதிராவிடர் வகுப்பினர் பயன்படுத்தி வந்த மயான கொட்டகை பகுதி வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நாட்களாக கரும்பு பயிரிடப்பட்டு வந்து.. இதனால் உள்ளிக்கடை பெருமாள் கோயில் பகுதியில் எந்த ஒரு துக்க நிகழ்வு ஏற்பட்டாலும் மயான கோட்டைக்கு செல்வதில் பிரச்னை ஏற்பட்டு சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.. அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள் இடத்தை நில அளவை செய்து உங்களுக்கு மயான கொட்டகைக்கு இடம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்படி அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் வெட்டப்பட்டு இருந்த நிலையில் அரசு சார்பில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கென்னடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் பூரணி, சுபாஷ் சந்திரபோஸ்,பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் நேதாஜி, மற்றும் பலர் சம்பவ இடத்தை நில அளவை செய்தனர்.
நில அளவை செய்ததில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த பகுதியில் கம்பிவேலி அமைத்து உள்ளிக்கடை பெருமாள் கோயில் கிராம ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மயான கொட்டகை மற்றும் மயானத்துக்குச் செல்லும் சாலை அமைத்துக் கொள்ளும் வகையில் கையகப்படுத்தினர். இதனால் பல ஆண்டு காலமாக இந்த பகுதியில் நீடித்து வந்த இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu