மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட சுவாமி  சிலைகள்  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கிருஷ்ணகிரியில் கைப்பற்றப்பட்ட தொன்மையான உலோக சிலைகளான திருமால் மற்றும் திருமகள் சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

இந்த இரு சிலைகள் மீட்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கிருஷ்ணகிரியில் கைப்பற்றப்பட்ட தொன்மையான உலோக சிலைகளான திருமால் மற்றும் திருமகள் சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் அண்மையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது சொத்துகளை பிரிப்பதில் அவரது பிள்ளைகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டினுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து பார்த்தபோது அங்கு இரண்டு பழங்கால ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. இவர்களிடத்தில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக சிலைகள் கடத்தல் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் சென்ற சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் 51 சென்டிமீட்டர் உயரம் உள்ள திருமால் சிலையையும், 42 சென்டிமீட்டர் உயரமுள்ள திருமகள் சிலையையும் கைப்பற்றி கும்பகோணத்திற்கு கொண்டு வந்தனர் .

கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளில் திருமால் சிலையில் இருந்த 4 கைகளில் ஒரு கை அறுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சிலைகள் மீட்பு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளை சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story