கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரமலான் நோன்பு திறப்பு

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரமலான் நோன்பு திறப்பு
X

கும்பகோணம் கிஸ்வா சார்பில் நடைபெற்ற ரமலான்  நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, கிஸ்வா தலைவர் ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் சிராஜ்தீன், திட்ட தலைவர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் பிளாக் துலிப்எஹியா கலந்து கொண்டார்.

மார்க்க அறிஞர் அப்துல் ரஹ்மான் யூசுபி பேசியதாவது: ரமலான் மாதம் வந்து விட்டால் இஸ்லாமியர்கள் தங்கம், வெள்ளி, வியாபார பொருட்கள், விவசாய நிலங்கள், ரொக்க கையிருப்பு, என தங்களது ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத்தை கணக்கிட்டு ஏழை வரி எனப்படும் வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்துகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில், கிஸ்வா செயற்குழு உறுப்பினர்கள் சீமாட்டி பஷீர் அகமது, தீன் அகமது தம்பி, குறிஞ்சி பிர்தவுஸ்கான், கிரேட்வே ஜாகிர் உசேன் மற்றும் சமுதாய பிரமுகர்கள் ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜமாஅத்தார்கள் மற்றும் சிறுவர்கள் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business