கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா

கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா
X
கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா

கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்திய இசை முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியாக 5ம் தேதி செவ்வாய்க்கிழமை தங்க கருடசேவையும், தொடர்ந்து 9ம் நாள் நிகழ்ச்சியாக 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராமநவமியினை முன்னிட்டு ஸ்ரீ ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!