100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு ரசாயன இடுபொருட்கள் வழங்கல்

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு ரசாயன இடுபொருட்கள் வழங்கல்
X

மாதிரி படம்

பட்டீஸ்வரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன இடுபொருட்கள் வழங்கப்படுவதை வேளாண்மை கூடுதல் இயக்குனர் அசோகன் ஆய்வு

தமிழக முதல்வரின் உத்தரவுபடி விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த பட்டிஸ்வரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுவதை சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரசாயன உரங்கள் இருப்பு விபரம் பதிவேடு மற்றும் இலவச ரசாயன உரங்கள் கணக்கு பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். விவசாயிகளிடம் குறுவை தொகுப்பு திட்டத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து உரக்கிடங்கு நேரில் சென்று உரங்கள் பதிவேட்டின் படி சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து விவசாயிகளிடம் உரங்கள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது இலவச உரங்கள் பெற வந்திருந்த விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி திட்டத்தில் 100 சதவீத மானிய ரசாயன உரங்களை வழங்கினார். இதனையடுத்து கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்ட பயனாளிகளின் வயலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கிருந்த விவசாயிகளிடம் மானிய உரங்கள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர் கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் துணை அலுவலர் சாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!