சமுதாயக் கூடத்தில் மோதிய தனியார் பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்

சமுதாயக் கூடத்தில் மோதிய தனியார் பஸ்: அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய 50 பயணிகள்
X

தனியார் பஸ் சமுதாய கூடத்தில் மோதி நிற்கும் காட்சி

அதிவேகமா வந்த தனியார் பஸ் சமுதாயக் கூடத்தில் மோதியது. இதில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சுந்தரபெருமாள் கோயில் ரயில்வேகேட் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் அதிவேகத்தில் மோதிவிட்டது.

பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ்சின் முன் பக்க மிகவும் மோசமான நிலையில் உடைந்தது. இந்த தனியார் பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரகுராமன் (40) என்பவர் பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் அருகிலுள்ள பொதுமக்கள் அறிந்து உடனே வந்து மீட்பு பணியில் இறங்கினர். இந்த விபத்து குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ai based agriculture in india