கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை

கும்பகோணத்தில் மின்நிலையம் பராமரிப்பு பணி: நாளை மறுநாள் 17ஆம் தேதி மின்தடை
X

பவர் கட் மாதிரி படம் 

கும்பகோணம் துணை மின்நிலையத்தில் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 09.00 முதல் மாலை 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

கும்பகோணம் துணைமின் நிலையம் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் 17.07.2021 அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதால், கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் அன்று மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு '1912' என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
the future of conversational ai