உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சுவாமிமலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சுவாமிமலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு
X
சுவாமிமலை பேரூராட்சியில் நடைபெற்ற போலீஸ் கொடி அணிவகுப்பு மரியாதை. 
சுவாமிமலையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில், தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எந்தவித அச்ச உணர்வு இருக்கக் கூடாது என்ற நோக்கில், போலீஸ் - பொதுமக்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு பேரணியை, கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த அணிவகுப்பு ஊர்வலம், சுவாமிமலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து, நான்கு வீதிகள் வலம் வந்து, கொடிமரத்து மூலை அருகில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில், பயிற்சி டிஎஸ்பி மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், ரமேஷ்குமார், மகாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!