ஆடுதுறை நகர பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

ஆடுதுறை நகர பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
X

ஆடுதுறை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டம், ஆடுதுறை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், ஆடுதுறை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், ஆடுதுறையில் பாமக நகர தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க நகர தலைவர் வினோத், நகர செயலாளர் பிக்கி (எ) இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் குமார், தங்க.அன்பழகன், பாலதாண்டாயுதம், சரவணன் வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர்கள் தமிழ்வேந்தன், அய்யாமணி, சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி தலைவர் ராஜா நன்றி கூறினார்.

கூட்டத்தில், விரைவில் நடைபெற இருக்கின்ற புறநகர் உள்ளாட்சி தேர்தலில், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தனித்து நின்று போட்டியிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!