பாமக சார்பில் விசலூர் தண்டலம் பகுதியில் மக்களை தேடி திண்ணை பிரச்சாரம்

பாமக சார்பில் விசலூர் தண்டலம் பகுதியில் மக்களை தேடி திண்ணை பிரச்சாரம்
X
திருவிடைமருதூர் அருகே, பாமக சார்பில் விசலூர் தண்டலம் கிளை சார்பில், மக்களை தேடி திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம், விசலூர் தண்டலம் கிளையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்த மக்களை தேடி திண்ணைப் பிரச்சாரம், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் கலந்து கொண்டார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் திருஞான பிள்ளை, மாநில இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், தலைமை நிலையப் பொறுப்பாளர் கேசவன், உழவர் பேரியக்கம் ஒன்றிய தலைவர் சேதுராமன், திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தண்டலம் கிளை செயலாளர் ரமேஷ், விசலூர் கிளை செயலாளர் வடிவேல், உழவர் பேரியக்கம் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, விசலூர் இளைஞரணி செயலாளர் நவீன், மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!