டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு -இருவர் கைது

டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு -இருவர் கைது
X

கும்பகோணத்தில் ஜான் செல்வராஜ் நகரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது .அதன் அருகிலேயே பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பார் அருகே தள்ளுவண்டியில் சேட்டு என்பவர் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.

தள்ளுவண்டியில் பிரியாணி விற்பவருக்கும், டாஸ்மாக் பார் மேலாளர் மாரிமுத்து விற்கும் இதுதொடர்பாக நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சேட்டு நண்பர்கள் மகேந்திரன், மற்றும் கமால் பாஷா ஆகியோர் பார் மேலாளர் மாரிமுத்து விடம் தகராறில் ஈடுபட்டதுடன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

இதில் மாரிமுத்துவின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாரிமுத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மகேந்திரன் மற்றும் கமால் பாட்சா ஆகியோரை கைது விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future