கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா
X
கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது

கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் தனது சொந்த செலவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய பகுதிநேர அங்காடியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டப்பட்ட இந்த அங்காடியில் 250 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அப்பகுதி மக்களுக்கு வேஷ்டி புடவைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. தனது சொந்த நிதியில் கிராமத்திற்கு அங்காடி அமைத்து கொடுத்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story