கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
X
கும்பகோணம் அருகே மானம்பாடியில் அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி.

சென்னையிலிருந்து மன்னார்குடியை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தை அடுத்த மானம்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்பு பாலாக்குடியை சேர்ந்த பாலு (60), சைக்கிளில் திடீரென வலது புறமாக திருப்ப முயன்றார். இதனை அறிந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை திருப்பும் போது, நிலைதடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அருகில் உள்ள குளத்தின் கரையில் பேருந்தை நிறுத்தினார். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருவாய்பாடியை சேர்ந்த நாகராஜன் மகன் சக்திவேல் (30) பலத்த காயமடைந்தார். பின்னால் அமர்ந்து வந்த திருவாய்ப்பாடியை சேர்ந்த செல்வம் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சக்திவேலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், பாலுவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது