கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியதால் பரபரப்பு

கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியதால் பரபரப்பு
X

விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது.

கும்பகோணம் அருகே தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டது.

கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர்.

இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர். ஒருவர் அவசர அவசரமாக ஆஷா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலகியதால் குழந்தைகளை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!