சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு
X

ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார். 

சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில், காவல்துறையினர் சுவாமிமலை பகுதிகளில் ஒமிக்ரான் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, சுவாமிமலை கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகள், துண்டு பிரசுரங்களை, கொடுத்து, முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story