கும்பகோணம் அன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

கும்பகோணம் அன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட  முகாம்
X

கும்பகோணம் அன்னை கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்.

கும்பகோணம் அன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - I,II & III ன் சார்பாக மியாவாக்கி காடு உருவாக்கப்பட்டது.

இதில் 20 வகையான, 100-ற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரியின் தலைவர் டாக்டர் அன்வர்கபீர் தலைமை தாங்கினார். இயக்குனர் முனைவர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். முதலவர் முனைவர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார்.

துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் வெங்கடேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியை சரண்யா நன்றி கூறினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலப்பணியாற்றினர்.

Tags

Next Story