கும்பகோணத்தில் சுற்றியுள்ள 4 பேரூராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை

கும்பகோணத்தில் சுற்றியுள்ள 4  பேரூராட்சிகளில் யாருக்கும்  பெரும்பான்மை இல்லை
X
கும்பகோணத்தில் சுற்றியுள்ள நான்கு பேரூராட்சிகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி

ஆடுதுறை பேரூராட்சி 15 வார்டுகளில் திமுக 4 வார்டுகளிலும், பாமக 4 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும் சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பனந்தாள் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வார்டிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 6 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் சுயேட்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. திருபுவனம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேற்கண்ட நான்கு பேரூராட்சிகளிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தால் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு