மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் வடிவமைப்பு..!

மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் வடிவமைப்பு..!
X
மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் முகமதுபாசித், அன்புசெல்வன், ஹரிஹரன், கார்த்திக் ஆகியோர் இணைந்து பேராசிரியர் சரண்யாவின் வழிகாட்டுதலின்படி மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

அதன்படி இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் மண்புழு உரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மனதில் கொண்டு மண்புழு உற்பத்தியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இந்த சாதனமானது, மண் புழுவை அதன் வளர்ச்சிக்கு தேவையான தட்பவெப்ப நிலையை பராமரித்து வளர்க்கும்போது அதிகளவில் மண்புழு உரம் உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கேற்றவாறு புதிய சாதனத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதிய கருவியை வேளாண்மைப் பொறியியல் துறை உதவி பொறியாளர் ரவிகிருஷ்ணன் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், இக்கருவியானது இயற்கை உர உற்பத்தியில்விவசாயிகளுக்கு மிக முக்கிய பங்கு ஆற்றும் என்றார். கல்லூரி நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், துறைத தலைவர் (பொ) சந்திரசேகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil