கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
புதிய கருவி கண்டு பிடித்த மாணவர்களுடன் பேராசிரியர்கள் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் கண்டுபிடித்த Artificial Intelligence Bus-ஐ சந்திராயன் விஞ்ஞானி முனைவர். மயில்சாமி அண்ணாதுரை நேரில் பாராட்டினார். கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சஞ்சய், பாலாஜி, ஜோஸ்வா, ஆரோக் ஆஸ்டின், பகலவன் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் இணைந்து Artificial Intelligence Bus - ஐ பேராசிரியர்கள் சதிஷ்குமார் மற்றும் முனைவர். சுந்தர செல்வன் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வடிவமைத்துள்ளனர்.
சமீப காலங்களில் மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரி வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு இந்த புதிய கண்டுபிடிப்பு ஓட்டுநரின் கண் மறைவு பிரதேசத்தை தெளிவாக காட்டும் வகையிலும் ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்படும்போது வாகனத்தை தானாக நிறுத்துமாறு இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் பின் புறத்தில் இருந்து சாலையை கடக்கும்போது எதிர்வரும் வாகனத்தால் ஏற்படும் விபத்தினை தவிர்க்கும் விதமாக இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இக்கருவி கல்லூரி பேருந்தில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இப்புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாணவர்களை சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பாராட்டி கவுரவித்தார். இவ்விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, தலைவர் செந்தில்குமார் ஆலோசகர், பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் முனைவர்.பாலமுருகன், துணை முதல்வர் முனைவர்.கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர்.ருக்மாங்கதன் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu