கும்பகோணத்தில் பல வழக்குகளில் தொடர்புள்ள வாலிபர் மர்ம சாவு

கும்பகோணத்தில் பல வழக்குகளில் தொடர்புள்ள  வாலிபர் மர்ம சாவு
X

மர்மமாக இறந்து கிடந்த  வாலிபர்

கும்பகோணத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தார்

கும்பகோணம் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள பழைய பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.

சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் மேற்கு போலீசார் இறந்து கிடந்த நபருக்கு அருகில் கிடந்த போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை கைப்பற்றி இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கும்பகோணம் ஆணைக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற ஊத்துவிஜய் (26) என்பதும், இவர் மீது கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் அவருக்கு அருகில் கிடந்தது போதை ஊசிகள் என கண்டறியப்பட்டுள்ளது.. அந்த மாத்திரைகள் உடல் வலிகளுக்கு பயன்படுத்தப்பட கூடியதும் எனவும் தெரியவந்துள்ளது.

எனவே அதிக போதை ஊசி செலுத்தி கொண்டதன் காரணமாக விஜய் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. அவரது மர்ம சாவு பற்றி கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!