கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு

கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு
X

உள்ளூர் ஊராட்சியில், தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ. அன்பழகன் பார்வையிட்டார். 

கும்பகோணம் அருகே, உள்ளூர் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ அன்பழகன், நேரில் ஆய்வு செய்தார்.

கும்பகோணம் நகராட்சி பகுதியில் இருந்து, உள்ளூர் ஊராட்சி வழியாக தேப்பெருமாநல்லூர் செல்லும் மோரி வாய்க்கால், சுமார் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில், மோரி வாய்க்காலை தூர்வாரிட வேண்டும் என, உள்ளூர் ஊராட்சி பொதுமக்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மோரி வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது இப்பணிகளை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பார்வையிட்டார் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சுதாகர், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் கரிகாலன், நேரு, ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி சண்முகம், உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், புளியம்பேட்டை ரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture