சுவாமிமலை அருகே உயர்மின் கோபுர விளக்கில் இருந்த சோடியம் விளக்குகள் மாயம்

சுவாமிமலை அருகே உயர்மின் கோபுர விளக்கில் இருந்த சோடியம் விளக்குகள் மாயம்
X

சுவாமிமலையில் இருந்த சோடியம் மின் விளக்கு மாயமாகி உள்ளது.

சுவாமிமலை அருகே உயர்மின் கோபுர விளக்கில் மாயமான சோடியம் மின் விளக்குளை மீண்டும் பொருத்த வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் ஊராட்சி புளியஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் கடந்த 2017-18ம் ஆண்டு பாரதிமோகன் எம்.பி. நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் செலவில் புதிதாக உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.

உயர்மின் கோபுர விளக்கிலிருந்த 6 சோடியம் விளக்குகளும் மர்ம நபர்களால் திருடப்பட்டு உயர்மின் கோபுர விளக்கு வெறும் கோபுரம் மட்டும் உள்ளது. விளக்குகள் அனைத்தும் மாயமாகி விட்டன. புளிஞ்சேரி வழியாக தான் திருப்புறம்பியம் , இன்னம்பூர், கொந்தகை, சோழங்கர் நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த வழியாக பொதுமக்கள் தினசரி சென்று வருகின்றனர்.

ஆனால் தற்பொழுது அந்த விளக்கில் இருந்த 6 சோடியம் விளக்குகள் மர்ம நபர்கள் கழட்டி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த பகுதி முற்றிலும் இருளில் மூழ்கி இருப்பதால் புளியஞ்சேரி பேருந்து நிலையத்தில் நிற்க பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் இந்த வழியாக இன்னம்பூர்- திருப்புறம்பயம் சாலையில் செல்ல பொதுமக்கள், வணிகர்கள் பயந்து வருகின்றனர்.

எனவே காணாமல் போன உயர்மின் கோபுர விளக்கில் இருந்த ஆறு சோடியம் விளக்கினை உடனடியாக கண்டுபிடித்து அதை அமைத்து இருளில் மூல்கிய இந்த பகுதியை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!