/* */

கொரோனாவால் குடும்பத்தில் 3 பேரை இழந்தவர், கருணை அடிப்படையில் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு

கும்பகோணத்தில் கொரோனாவால் குடும்பத்தில் 3 பேரை இழந்த பெண் கருணை அடிப்படையில் வேலை கேட்டு தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

கொரோனாவால் குடும்பத்தில் 3 பேரை இழந்தவர், கருணை அடிப்படையில் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு
X
கொரோனாவால் குடும்பத்தில் 3   பேரை இழந்து வாழ்வாதாரம் பாதித்த பெண் கருணை அடிப்படையில் வேலை கேட்டு தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் இறந்ததால், வருமானமின்றி தவிப்பதாகவும்,ஒர வேளை உணவுக்கு தவிப்பதால், கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் இமானுவேல் விமல் ராஜ் (வயது44). இவருடைய மனைவி எஸ்தர் ருஷ்யா (40). இவர்களுக்கு ஜாஷ்வா, ஜோய் ஆபிரகாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இமானுவேல் விமல்ராஜ் மரணமடைந்தார். மேலும் இமானுவேல் விமல்ராஜின் தந்தை ஜெயராஜ் (77), தாயார் கிளாரா (75) ஆகியோர் கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தனர்.

இதையடுத்து எஸ்தர் ருஷ்யா மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பினார். ஜெயராஜும், கிளாராவும் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் உயிர் இழந்ததால் எஸ்தர் ருஷ்யாவால் வருமானமின்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப் பட்டதால் எஸ்தர் ருஷ்யா வேலை இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.

மேலும் தனது பிள்ளைகளுடன் ஒரு வேளை உணவுக்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ள தனது மகனுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கோரிக்கை மனு அளித்துள்ளார், அதில்

எங்களது குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் நாங்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறன்..

வருமானத்திற்கும் வேறு வழியில்லை. இதனால் எனது மகன்களை நான் எவ்வாறு படிக்க வைக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லைஎனவே இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் எனக்கு ஏதாவது வேலை வழங்க வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை