மேகதாதுவில் அணை கட்ட முயற்சி : எடியூரப்பா உருவ பொம்மை காவேரி ஆற்றுக்குள் மூழ்கடித்து விவசாயிகள் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி :  எடியூரப்பா உருவ பொம்மை  காவேரி ஆற்றுக்குள்  மூழ்கடித்து  விவசாயிகள் கண்டனம்
X

கும்பகோணம் விவசாயிகள் எடியூரப்பா உருவ பொம்மையை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் அழுத்தி விவசாயிகள் கண்டனம் கோஷமிட்டனர்.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டித்து அவரது உருவ பொம்மையை ஆற்று நீருக்குள் அழுத்தி விவசாயிகள் கண்டனம் கோஷமிட்டனர்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி காவிரி மீதான தமிழக உரிமையை பறிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் கபட சூழ்ச்சியினை இந்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து விவசாய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

மேலும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை, சுந்தர சுவாமிநாதன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் இறங்கி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையுடன் அவரை கண்டித்து கோஷமிட்டு, அவரது உருவ பொம்மையை ஆற்றுக்குள் அழுத்தி காவிரி ஆற்றில் விட்டனர்.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு, மின்னஞ்சலில் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!