மத்திய கால மறுமாற்றுக் கடன் ரூ 420 கோடி தள்ளுபடி: விவசாயிகள் போராட்டம்

மத்திய கால மறுமாற்றுக் கடன் ரூ 420 கோடி தள்ளுபடி:  விவசாயிகள் போராட்டம்
X

கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் மத்திய கால மறுமாற்று கடன் தள்ளுபடி செய்யக்கோரி கும்பகோணத்தில் விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் விதி 110–ன் கீழ் மறுமாற்று கடனை பாகுபாடின்றி தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்

கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையில் மத்திய கால மறுமாற்றுக் கடன் ரூ 420 கோடி கடன் தள்ளுபடி அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை கோரியும், 2016– -2017 மத்திய கால மறுமாற்றுக்டன் சுமார் 420 கோடி ரூபாய் தள்ளுபடிக்கான அறிவிப்பை கூட்டுறவுதுறை மானிய கோரிக்கையில் விதி 110ன் கீழ் அறிவிக்க கோரியும், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித்தார். வரதராஜன், சாமிநாதன், ஆதிகலிய பெருமாள் உள்ளிட்ட சுமார் 50க்கும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

இதில் கோரிக்கை விளக்க உரையாற்றிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கச்செயலர் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த 2016–17ம் ஆண்டு தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெற்றிருந்து பயிர்கடன் சுமார் 420 கோடியை அப்பொழுது ஏற்பட்ட கடுமையான வறட்சி, அதை தொடர்ந்து ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பு போன்ற இயற்கை இடர்பாடுகளால், தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது குறுகிய கால கடனாக வழங்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு மத்திய கால மறுமாற்று கடனாக அறிவித்தது. அதனை 3 தவணையாக செலுத்தவும் உத்தரவிட்டது. ஆனால் பல விவசாயிகள் வறட்சி மற்றும் கஜா புயல் காரணமாக செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த பிப்.8ம் தேதி தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக வெளியிட்ட அரசானையில், மத்திய கால மறுமாற்றுக்கடன் பெற்ற விவசாயிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. அப்போது, விடுப்பட்ட அந்த விவசாயிகளின் கடன்களையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பழனிசாமியிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை அவர் பரிசீலனை செய்யவில்லை.

புதியதாக தி.மு.க., அரசு பெறுப்பேற்ற நிலையில், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் வேளாண் தனி பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் வேளாண் தனி பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

மத்திய கால மறுமாற்று கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், 2021 ஜன.31ம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்ற அறிவிப்பை மாற்றி, மார்ச்.31ம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர்,நில உடமை, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையின் விபரங்களை, அனைவரும் தெரிந்துக்கொள்ளும் விதமாக வகையில் கிராம பஞ்சாயத்து, வி.ஏ.ஓ., அலுவலங்களில் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும். அதை போல இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் கடன் தள்ளுபடி குறித்த அரசானை வெளியாகி 200 நாட்களை கடந்த நிலையில், இதுவரை வெளிப்படைதன்மையாக கூட்டுறவுதுறை பயனாளிகளின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மத்திய கால மறுமாற்று கடனை பாகுபாடின்றி தள்ளுபடி செய்யதிட, சட்டசபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் விதி 110–ன் கீழ் அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!