கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா
![கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா](https://www.nativenews.in/h-upload/2022/01/15/1454815-img-20220115-wa0003.webp)
கோவிந்தபுரம் கோசாலையில் நடைபெற்ற கோ பூஜை.
கும்பகோணம் அருகே, கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு பாரம்பரிய நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரம் பசுக்கள் சேவை நோக்கத்தோடு வளர்க்கப்படுகிறது. பசுவின் பால் அதன் கன்றுக்கு மட்டும் என்ற அடிப்படையில் கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு மாட்டு பொங்கலை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை நடந்தது.
சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சதர், கோயில் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் கோ பூஜையினை செய்வித்தனர். பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு புஷ்பார்சனையுடன் கற்பூர ஆரத்தி செய்து கோ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பசுக்களுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu