மாசிமக ஆரத்தி பெருவிழா பத்திரிகை வெளியிட் ஆதீனங்கள் மற்றும் ஜீயர் சுவாமிகள்
கும்பகோணம் மாசிமக ஆரத்தி பெருவிழா பத்திரிக்கை - ஆதீனங்கள் மற்றும் ஜீயர் சுவாமிகள் வெளியிட்டனர்
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது. இவ்வாண்டு வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக பெருவிழா கும்பகோணத்தில் தொடங்குகிறது.
17ம் தேதி மாசிமகத்தன்று கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையில் மாலை 6 மணிக்கு ஆரத்தி பெருவிழா நடக்கிறது. சதுர்வேத பாராயணம், சைவ திருமுறைப் பாராயணம், லலிதாசகஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஜீயர்கள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துறவியர் பெருமக்கள், சாதுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மகா ஆரத்தி வழிபாடு நடத்துகின்றனர்.
மாசிமக ஆரத்தி பெரு விழா அழைப்பிதழை கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜையில் பேரூர் ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 233வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் சீர்வளர்சீர் சிவராமசாமி அடிகளார், சிவராமாபரம் ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஜ ஜீயர், விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
இதில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, மாவட்ட பொறுப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், தென் பாரதக் கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவர் சௌமி நாராயணன், செயலாளர் சத்திய நாராயணன், துணை தலைவர் செல்வராஜ், கூடுதல் செயலாளர் வெங்கட்ராமன், நிர்வாக குழு உறுப்பினர் முரளி, தணிகைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu