திருபுவனத்தில் மாசி பட்டுத் திருவிழா: கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நடத்துகிறது
இந்தியாவின் பட்டு விற்பனையில் முதல் நிறுவனமான திகோசில்க்ஸ் என்று அழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மாசிபட்டு திருவிழா கடந்த 10.2.2020 முதல் 14.3.2002 வரை நடைபெற்று வருகிறது.
திருபுவனம் பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு (Gl) பெற்ற திகோ சில்க்ஸ் - ல் மாசிப் பட்டுத் திருவிழாவின் ஒரு அங்கமாக பாரம்பரியமிக்க திருபுவனம் பட்டு சேலைகள் மாபெரும் கண்காட்சி 26 2 2020 அன்று கொண்டாடப்பட்டது கண்காட்சிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய பயன்படுத்தப்பட்ட 750 திருபுவனம் பட்டு சேலைகள் 600 நபரிடம் இருந்து பெறப்பட்டு கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டது
இச்சேலைகள் கும்பகோணம் தொழிலதிபர் கோவிந்தராஜன் சென்னை நெசவாளர் சேவை மையத்தின் துணை இயக்குனர் மற்றும் கைத்தறித் துறை கும்பகோணம் உதவி இயக்குனர் அடங்கிய தேர்வு குழு மூலமாக தேர்வு செய்து சிறந்த பட்டு சேலைகளுக்கான பரிசுகள் முதல் பரிசு 25,000 /-ரூபாய் இரண்டாவது பரிசு 15.000 /- மூன்றாவது பரிசு 10,000 ரூபாய் மதிப்புள்ள திருபுவனம் பட்டு சேலைகள் பின்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. மேற்படி கண்காட்சியில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பழைய பட்டு சேலைகளுக்கு கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கு சான்றிதழுடன் பராமரிப்புச் செலவினமாக ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கப்பட்டது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்களும். வாடிக்கையாளர்களும். முக்கிய பிரமுகர்களும் கண்டுகளித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu