சுவாமிமலை அருகே திம்மகுடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

சுவாமிமலை அருகே திம்மகுடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
X

சுவாமிமலை அருகே திம்மகுடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுவாமிமலை அருகே திம்மகுடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி மாரியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, விக்கிரகங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், மாலை அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜையும் முதல் கால யாக பூஜையும் தீபாராதனையும், மறுநாள் யாகசாலை பூஜை ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை தீபாராதனை, அதனை தொடர்ந்து கடம்புறப்பாடு, விமான கும்பாபிஷேகம், ஸ்ரீ முத்துமாரி அம்மன் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திம்மகுடி கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!