பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது
X
பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் மணல் திருட்டு தொடர்பாக ரோந்து செய்து வரப்பட்டது. இந்நிலையில் இன்று பந்தநல்லூர் காவல் நிலைய சரகம் புலிதிகுடி கிராமத்தில் பாண்டிச்சேரி சாராயம் விற்பது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் புலிதிகுடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண்ராஜ் (29), செல்வராஜ் மனைவி விஜயா (60) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்த போது விஜயா போலீசை கண்டதும் தலைமறைவாகிவிட்டார். சரண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story
ai in future agriculture