திருப்பனந்தாள் அருகே 4 கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
திருப்பனந்தாள், கோணுழாம்பள்ளம் அருகே திட்டச்சேரி கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில், வேப்பணார் என்கிற அய்யனார் கோயில், மகா மாரியம்மன் கோயில், உருத்திராபதீஸ்வரர் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காலை சதுர் வேத பாராயணம், தேவார பாராயணத்துடன் 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடு, மங்கள வாத்தியம் முழங்க நடந்தது.
முதலில் வேப்பணார் கோயில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாமாரியம்மன் கோயில், உத்திராபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு காசி விசுவநாதர் விசாலாட்சி உள்ளிட்ட அனைத்து சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மதியம் ஐதீக முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் கோணுளாம்பள்ளம், திட்டச்சேரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு விஸ்வநாத சுவாமி கோயில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், அய்யனார் , மகாமாரியம்மன், உத்திராபதீஸ்வரர் உள்ளிட்ட கிராம தேவதை வீதிஉலா காட்சி நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu