கும்பகோணம் : பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு அலங்காரம்

கும்பகோணம் : பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு அலங்காரம்
X
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்

ஆடி மாதம் பூர நட்சத்திரத்தையொட்டி கும்பகோணம் பகுதி கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம், பூரம் நட்சத்திர நாளில் ஆடிப்பூரம் விழா கும்பகோணம் பகுதி கோவில்களில் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், நேற்று ஆடி பூர தினத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், வியாழ சோமேஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல், கும்பகோணம் அரசலாறு கரையிலுள்ள ஸ்ரீசுவாதி மாரியம்மன் கோவில் கும்பகோணம் உப்புக்காரத்தெரு அரியலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில், நாதன் கோயில் ஜெகநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!