கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக்கூட்டம்

கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுக  ஆலோசனைக்கூட்டம்
X

கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக்கூட்டம் கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வரும் 29ம் தேதி பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது

கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக்கூட்டம் கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், எதிர்வரும் 29ம் தேதி பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தாராசுரம் பேரூர் கும்பகோணம் மாநகரில் இணைந்து விட்டதால் வார்டு வரையறை வாக்காளர் பட்டியல் கிடைத்தவுடன் இந்த வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும், 18 வயது நிரம்பிய புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்கவும், ஏற்கனவே இணையவழியில் கழகத்தில் இணைந்தவர்களையும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் சேர்க்க வேண்டும், மாநகராட்சி (பேரூர்) பட்டியல் வந்தவுடன் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் தில்லையம்பூர் கரிகாலன், மணிவாசகம், லோகநாதன், சாகுல்அமீது, அன்பழகன், இளங்கோ, ராமச்சந்திரன், கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் கேசவன், பாஸ்கர், அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மேலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!