கும்பகோணத்தில் ரூ. 9.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

கும்பகோணத்தில் ரூ. 9.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு
X
தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் திறந்து வைத்தார்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பாபுராஜபுரம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்வில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், பொறுப்புக் குழு உறுப்பினர் செல்லக்கண்ணி லோகநாதன், பகுதி செயலாளர் தி.கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தங்க.தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி கணேசன், துணை தலைவர் பிச்சையம்மாள் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!