கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம்

கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம்
X
கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பட்டு ஆடைகளை கொண்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், கோடை வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து மக்களை காக்க வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டியும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமாருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ai marketing future