கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடம்: ரூ.64 லட்சம் மதிப்புள்ள பருத்தி ஏலம்

கும்பகோணம் ஒழுங்குமுறை  விற்பனை கூடம்:  ரூ.64 லட்சம் மதிப்புள்ள  பருத்தி ஏலம்
X

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம்

ஏலத்தில் பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் சார்ந்த 10 வியாபாரிகள் கலந்துகொண்டனர்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி் ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 830 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் சார்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பருத்தியின் மதிப்பு சராசரியாக 64 லட்சம் ரூபாய் ஆகும்.

இதில், தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலையாக ரூ. 8000 .

குறைந்தபட்ச விலையாக ரூ.7219 ,.

சராசரி மதிப்பு ரூ.7750 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!