கும்பகோணத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

கும்பகோணத்தில் நாளை  மின்தடை செய்யப்படும் இடங்கள்
X
கும்பகோணத்தில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர் (இயக்குதலும் பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கும்பகோணம் ராஜன் தோட்டம் துணை மின் நிலையம் மற்றும் கும்பகோணம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறுகின்ற கும்பகோணம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் செட்டிமண்டபம், மேலகாவிரி மற்றும் கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை காலை 10 மணி முதல், மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture