கும்பகோணம் பகுதியில் பிரபல நகைக் கடைகளுக்கு சீல்

கும்பகோணம்  பகுதியில்  பிரபல நகைக் கடைகளுக்கு  சீல்
X

கும்பகோணம் சாரங்கபாணி கீழ சன்னதி பகுதியில் கொரோனாஊரடங்கு நடைமுறைகளை பின்பற்றாத பிரபல நகைக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கீழ சன்னதி பகுதியில் இயங்கி வரும் பிரபல நகை கடைகளில் அரசு உத்தரவை மீறி முன்பக்க கதவை அடைத்துக்கொண்டு பின் கதவு வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து நகை வியாபாரத்தில் ஈடுபடுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நகை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 பிரபல நகைக் கடைகளில் அரசு உத்தரவை மீறி நகை விற்பனை நடைபெறுவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு நகை கடைகளுக்கும் நகராட்சி ஆய்வாளர் டேவிட் பாஸ்கர ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!