கும்பகோணத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
X

கொரோனாவால் உயிரிழந்த கும்பகோணம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ். கடந்த 1995-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரியும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாம்.

இந்நிலையில், அவருக்கு திடீரென தொடர் காய்ச்சல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் (செப்- 22) வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் இருந்து வந்தாராம். இதற்கிடையே, அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடந்து, அவர் கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜுவுக்கு சண்முகப்ரியா(50) என்ற மனைவி, ஸ்ரீ ராம்(18), ஸ்ரீ ராகுல்(15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த காவல் துறையினரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story