கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது

கும்பகோணம் அருகே  சிறுமிக்கு பாலியல் தொல்லை :  3 பேர் கைது
X

கைது (பைல் படம்)

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சுவாமிமலையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, சுவாமிமலை சின்னகடைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (18) என்பவர் காதலிப்பதாக கூறி அவருடைய போட்டோவை வாங்கியுள்ளார்.

இந்த போட்டோவை மணிகண்டன் தனது நண்பர்களான சுவாமிமலை மேலவீதி அறிவழகன் மகன் அபிஷேக் (19), அங்களாம்மன்கோயில் தெரு நடராஜன் மகன் செல்வம்(20) ஆகியோருக்கு அனுப்பியுள்ளனார்.

மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறுமி தனது தந்தையிடம் கூறி சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மூவரையும் இன்று கைது செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!