எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு, கும்பகோணம் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு
கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எண்ணெய் வியாபாரி கொலை செய்யபட்டு அவரது வீட்டில் கொள்ளை நடந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று (22-ந் தேதி) நீதிபதி குற்றவாளி 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன் ( 63). கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் கொலையாளிகள் ராமநாதன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான போலீஸ் குழுவினர் குற்றவாளிகள் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்தவழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரும் சாவாலாக அமைந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் துப்புதுலக்கியதில் கும்பகோணம் ஆல்வான்கோயில் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன், மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த ஹரிஹரன், ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகியோர் கூட்டாக இந்த கொலை மற்றும் கொள்ளை செய்தனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் 20 ந் தேதி குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட (விரைவு) கோர்டில் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இதில் கொலை செய்யப்பட்ட ராமநாதனின் உறவினர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு தாப்பு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் சுமார் 5 மணி நேரம் நீதிபதி பெஞ்சமின் ஜோசப் விசாரணை மேற்கொண்டார்.
இதில் குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், கொலைக்கான காரணம், கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், கொலையாளிகளை கண்டுபிடிக்க மேற்கொண்ட யுக்திகள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தவிதம் உள்ளிட்டவை குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நீதிபதியிடம் விரிவாக சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் (22-ந் தேதி) இன்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பளித்தார்.தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட தங்கபாண்டியன்,ஹரிஹரன், ரஞ்சன்,வினோத், பாலாஜி ஆகிய ஐந்து பேருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனைகளை வழங்கி தீர்ப்பு அளித்தார். மேலும் இரு தண்டனைகளையும் ஏகபோக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எளவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu