கும்பகோணத்தில் ஒரு வாக்குகூட வாங்காத பாமக வேட்பாளர்

கும்பகோணத்தில் ஒரு வாக்குகூட வாங்காத பாமக வேட்பாளர்
X
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில், பாமக வேட்பாளர், ஒரு வாக்குகூட வாங்காத பரிதாப சூழல் ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 35 வது வார்டில் போட்டியிட்ட கா.செந்தில்குமார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், இவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, செந்தில்குமார் 33-வது வார்டில் வசித்து வரும் நிலையில், 35வது வார்டில் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் பிரச்சாரமும் செய்துள்ளார். ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!