கும்பகோணத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் இரு மருத்துவர்கள் உயிரிழந்தனர்
கும்பகோணம் சாந்தி நகரில் தனியார் நீரழிவு சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வந்தவர் மருத்துவர் சித்தார்த்தன் (52). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்ததால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சித்தார்த்தன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இரவது மறைவுக்கு திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், கும்பகோணத்தில் சிறப்பாக மருத்துவப் பணியாற்றிய சித்தார்த்தன் மறைவு என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, அவரோடு மருத்துப் பணியாற்றும் சக மருத்துவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனவே அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவ நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் கும்பகோணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அப்துல்அஜீம்(75). இவர் காது,மூக்கு, தொண்டை மருத்துவர். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் அப்துல்அஜீம் சிகிச்சை பலனின்றி காலை இறந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu